உதவி ஜெயிலராக பணிபுரிய ஆசையா...!! டிஎன்பிஎஸ்சி அழைக்கிறது!!

Posted By:

சென்னை: தமிழகத்தில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 8-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மொத்தம் 104 உதவி ஜெயிலர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிரப்பவுள்ளது.

உதவி ஜெயிலராக பணிபுரிய ஆசையா...!! டிஎன்பிஎஸ்சி அழைக்கிறது!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும்.

எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம், டிடபிள்யூ பிரிவினருக்கு வயதுச் சலுகை உண்டு.

இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பவேண்டும்.

இதற்கு டிஎன்பிஎஸ்சி பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்தவேண்டும். மேலும் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்தவேண்டும். நுழைவுச் சீட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஏப்ரல் 8-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். கட்டணம் செலுத்த கடைசி நாள் ஏப்ரல் 12 ஆகும். தேர்வுகள் ஜூலை 24-ம் தேதி நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தைப் பார்க்கவும்.

English summary
Applications are invited by Tamil Nadu Public Service Commission. TNPSC is looking out for 104 posts of Assistant Jailor. Details of this recruitment is listed below.Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job.Candidates should have a degree of B.A., or B.Sc., or B. Com., of any University or institution recognized by the UGC. To know more about the required qualification in detail log on to this organisation's website.Age Limit: Others: 18-30 years. SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs (OBCMs) BCMs and DWs of all Castes: No Max age limit.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia