சுகாதாரத் துறையில் 89 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு

Posted By:

சென்னை: குழந்தைகள் சுகாதாரத்துறை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதற்கான பணியிடங்களை தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நியமனம் செய்யவுள்ளது.

சுகாதாரத் துறையில் 89 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு

சுகாதாரத்துறையில் காலியாகவுள்ள குழந்தைகள் சுகாதாரத்துறை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மொத்தம் 89 இடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு அல்லது பி.எஸ்சி பப்ளிக் ஹெல்த் நர்ஸ் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். மேலும் இடஒதுக்கீட்டின் கீழ் சாதிப் பிரிவினருக்கு உரிய வயதுச் சலுகைகள் இந்தப் பணியிடங்களுக்கும் உண்டு.

முதலில் எழுத்துத் தேர்வை எழுதவேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

சம்பளம் ரூ.9.300 - ரூ34,800- ரூ.4,700 என்ற அளவில் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.175-ஐ செலுத்தவேண்டும்.

ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும். ஆகஸ்ட் 20-ம் தேதி விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு பொதுத் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தைத் தொடர்புகொண்டு அறியலாம்.

http://www.tnpsc.gov.in/notifications/11_2015_not_eng_mcho.pdf என்ற இணையதள லிங்க்கிலும் விவரங்களைப் பெற முடியும்.

English summary
Applications are invited by interested and eligible candidates by Tamil Nadu public Service Commission (TNPSC). This is done to fill up various posts of Maternal and Child Health Officer in Tamil Nadu Public Health Service. Vacany Details Number of posts vacant: 89 posts Name of the posts: Maternal and Child Health Officer

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia