ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு!

Posted By:

சென்னை: ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் செய்யுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அடுத்தஆண்டு ஜனவரி 14-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு!

மொத்தம் 14 ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஊதியம் 9,300-34,800/- (PB2) + 4,400/- என்ற அடிப்படையில் இருக்கும்.

கல்வித் தகுதி: பொருளாதாரம், புள்ளியியல், வணிக நிர்வாகம், கணிதம், சோஷியாலஜி, அந்ரோபாலஜி, விவசாய பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் மாஸ்டர் டிகிரி படித்திருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, ஓபிசி பிரிவினருக்கு வயதுச் சலுகைகள் உண்டு.

விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு தபாலில் ஜனவரி 14-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

English summary
Tamil Nadu Public Service Commission (Tamil Nadu PSC) invited applications for the posts of Research Assistant in Evaluation and Applied Research Department. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 14 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia