5 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...!

டி.என்.பி.எஸ்.சி., என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 5 - A (தலைமை செயலக பணி ) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப் பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு, இணைய வழி வாயிலாக, தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

மேலாண்மை : மாநில அரசு

வெளியானது குரூப் 5 ஏ தேர்வு

பதவிகள் விவரம் :

இளநிலை உதவியாளர்(Junior Assistant)

உதவியாளர்(Assistant)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.09.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 161

வயது வரம்பு

தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிக்கும், நிதிப் பிரிவு உதவி அலுவலர் பதவிக்கும் விண்ணப்பிப்பதற்கு அதிகபட்ச வயது வரம்பாக 40ம் மற்ற பிரிவினர் அனைவருக்கும் அதிகபட்ச வயது வரம்பாக 35ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊதியம்

தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிக்கும், நிதிப் பிரிவு உதவி அலுவலர் பதவிக்கும், ஊதியமாக ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத உதவியாளர் பதவிக்கும், நிதி உதவியாளர் பதவிக்கும் ஊதியமாக, ரூ.20,000 முதல் ரூ.73,700 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவியில் அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து, ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தலைமைச் செயலகத்தில், நிதி பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் வணிகம் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு அமைச்சக சேவை அல்லது தமிழ்நாடு நீதித்துறை பணி ஆகியவற்றில் வழங்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கிய உதவியாளர் பிரிவில், ஐந்தாண்டுகளுக்கு குறையாத காலத்துக்கு பணியாற்றி அனுபவம் இருக்க வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் அல்லது தமிழ்நாடு அமைச்சக சேவை அல்லது தமிழ்நாடு நீதித்துறை பணி ஆகியவற்றில் வழங்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கிய உதவியாளர் பிரிவில், மூன்று ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தலைமைச் செயலகத்தில், நிதி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, வணிகம் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் பிரிவில் அல்லது உதவியாளர் பிரிவில் அல்லது தமிழ்நாடு அமைச்சகப் பணி அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் சேவையாற்றி இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

· ஒரு முறை பதிவு கட்டணம் - ரூ.150/-

· தேர்வுக் கட்டணம் - ரூ.100/-

வெளியானது குரூப் 5 ஏ தேர்வு

தேர்வு முறை

எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மொத்த மதிப்பெண்கள், பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில், (தனித்தனியே ஒவ்வொரு பதவிக்கும் பொருந்தும்) தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஏற்கனவே விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களைச் சரிபார்த்த பின்னர் அசல் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பொருட்டு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவர், பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வு சென்னை (0101) தேர்வு மையத்தில் மட்டுமே நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி, திறமை மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக, கடைசி நாளான செப்டம்பர் 21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். திரும்பவும் சொல்றேன் மறக்காதீங்க...!

நோட் பண்ணிக்கோங்க...!

அறிவிக்கை நாள் - 23.08.2022

இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் - 21.09.2022

இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் - 26.09.2022 நள்ளிரவு 12.01 முதல் - 28.09.2022 இரவு 11.59 வரை

நியமன அலுவலரிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ் மற்றும் தடையின்மைச் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் - 06.12.2022

கவனமாக வாசிக்கவும்...!

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

ஏன்பா தமிழ் மொழியிலும் போதிய அறிவு இருக்கனும்பா.... தயவு செஞ்சு மறந்துடாதீங்க...!

வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பாடத்திட்டம், வயது தகுதி,இதர பிற விவரங்கள் குறித்த முழு தகவல்களுக்கு...

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==

பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்...

பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்...

https://www.tnpsc.gov.in/Document/tamil/21_2022_Group_V_A_Notfn_Tamil.pdf

https://tnpsc.gov.in/Document/english/21_2022_Group_V_A_Notfn_Eng.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamil Nadu Public Service Commission known as TNPSC has announced written examination for the vacancies of Assistant Section Officer, Assistant.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X