தமிழகத்தில் சார் பதிவாளர் உள்ளிட்ட 1199 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 11ம் தேதியன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், உதவிப் பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு விதமான பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இத்தேர்வினை மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 மையங்களில் சுமார் 6 லட்சத்து 26,500-க்கும் மேற்பட்டோர் எழுதினர். இவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 54,136 பேரும், பெண்கள் 2 லட்சத்து 72,357 பேரும் 10 மூன்றாம் பாலினத்தினரும் ஆவர்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் http://www.tnpsc.gov.in/results.html என்னும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. முதன்முறையாகத் தேர்வு எழுதிய ஒரே மாதத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிடுவது இதுவே முதன்முறையாகும்.
இதனிடையே, டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 பிரதான தேர்வு வரும் 23ம் தேதியன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












