மார்ச் 1 முதல் 10 வரை.. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ பணிகளுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

Posted By:

சென்னை : ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான (குரூப் - 2ஏ) தேர்வு கட்டந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி நடத்தப்பட்டது. இத்தத் தேர்வுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் தரவரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தத்தேர்வினை 6.54 லட்சம் பேர் எழுதினர். அவர்களில், 6.48 லட்சம் பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை ஆகிய விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் ஜீன் 8ம் தேதி கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

தேர்வில் வெற்றி பெற்றவர்களில் மதிப்பெண் மற்றும் தரவரிசை அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் வைத்து மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடை பெறும் என தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மார்ச் 1 முதல் 10 வரை.. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ பணிகளுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்புச் சீட்டு விண்ணப்பதாரார்களுக்கு விரைவு அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்) மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்புச் சீட்டினை www.tnpsc.gov.in என்கின்ற இணையதளத்திலும் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும்
டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் எஸ்,எம்,எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமும் 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டவர்களுக்கு தகவல்களை தெரிவித்துள்ளது. தகவல் தெரிவிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட நேரம் மற்றும் குறிப்பிட்ட தேதியில் தவறாமல் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்குச் செல்ல வேண்டும். அப்படிச் செல்பவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்படும். சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு செல்லாதவர்களுக்கு மறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்பட மாட்டாது. மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ரத்து செய்யப்படும் என தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது.

English summary
tamil nadu public service commission has announced group 2 A exam 2016 - certificate verification date.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia