TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு.! குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்.!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குரூப் 2 தேர்விற்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது.

By Saba

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குரூப் 2 தேர்விற்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ உள்ளிட்ட பிரிவுகளுக்கான முதல்நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது.

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு.! குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்.!

டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதில், 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலத்திலும், மீதமுள்ள 100 கேள்விகள் பொதுஅறிவு பாடத்திட்டமாகவும் இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கப்பட்டுப் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய பாடத்திட்டத்தில் 175 கேள்விகள் பொது அறிவும், மீதமுள்ள 25 கேள்விகள் திறனறிவுக் கேள்விகளாகவும் இடம்பெற்றிருக்கும்.

மேலும், இந்த புதிய அறிவிப்பில் பொது அறிவு பகுதி பட்டப்படிப்பு அளவில் உள்ளது. திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு பகுதி 10-ம் வகுப்பு தரத்தில் இடம்பெற்றுள்ளது. இவை இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 3 மணி நேரத்திற்கு தேர்வு நடைபெறும். அதிகபட்ச மதிப்பெண்கள் 300 என்றும், குறைந்தபட்ச மதிப்பெண் 90 என்றும் உள்ளது.

முன்னதாக மொழிப்பாடம் தனிப்பகுதியாக இருந்து வந்த நிலையில், தற்போது மொழிப்பாடம் பொதுஅறிவு, திறனறிவு பகுகளாக உள்ளதால் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி-யின் இந்த புதிய பாடத்திட்டம் குறித்த முழுமையான விபரங்களை அறிய http://tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும். அல்லது இங்கே கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Group 2 2019: New Syllabus Published Ahead Of Notification
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X