குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!

தமிழகத்தில் குரூப் 1 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை தமிழக அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று வெளியிட்டுள்ளது. கூடுதல் விவரம் தேவைப்படுவோர் https://www.tnpsc.gov.in/ எனும் இணையதளத்தில் காணலாம். குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால் அதை எழுதியுள்ள தேர்வர்கள் மிகவும் குஷியில் உள்ளனர்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேரவுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்ட துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப்பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் 2022 நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.

குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!

இந்நிலையில் அந்த பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி 2023 ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வு எழுத வேண்டும்.
அதன்படி குரூப் 1 முதன்மைத் தேர்வு 2023 ஆகஸ்ட 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 2,113 பேர் வரை எழுதினர். அதன் முடிவுகள் மார்ச் 6-ம் தேதி வெளியானது. அதில் 198 பட்டதாரிகள் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் மார்ச் 26 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

இந்நிலையில் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலான முடிவுகளை நேற்று இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற 198 பேரில் 197 பேரின் மதிப்பெண்கள் அதில் இடம்பெற்று இருந்தன. இதில் 587.25 மதிப்பெண் பெற்ற பெண் தேர்வர் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tnpsc.gov.in/ எனும் இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால் அதை எழுதியுள்ள தேர்வர்கள் மிகவும் குஷியில் உள்ளனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Public Service Commission (TNPSC) has released the Group -1 results today. For more details aspirants can login into https://www.tnpsc.gov.in/
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+