டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப் ஒன் முதண்மை தேர்வில் முறைகேடு நடக்கவில்லையென விளக்கம்

Posted By:

டிஎன்பிஎஸ்சி முதண்ம தேர்வில் முறைகேடு நடந்தாக கூறப்படுவது நம்ப தகுந்த தகவல் அல்ல என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது . டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் ஒன் முதண்மை தேர்வில் முறைகேடு நடக்கவில்லையென டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முற்றிலும் நம்பகத்தன்மையோடு நேர்மையாக சரியான முறையில் நடத்தப்படுகின்றது

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வானது 8.11.2015 ஆம் நாள் குரூப் ஒன் முதண்மை தேர்வு நடைபெற்றது. குரூப் ஒன் முதண்மை தேர்வில் 1 லட்சத்து பதினேழாயிரத்து 696 பேர் தேர்வு எழுதினார்கள். குரூப் ஒன் முதண்மை தேர்வானது 2016 ல் 3816 பேர் தேர்வு பெற்றனர். குரூப் ஒன் முதண்மை தேர்வு எழுதியோர்கள் 2926 ஆம் பேர் சென்னையில் நடைபெற்ற முதண்மை தேர்வு எழுதினார்கள் அவர்களின் தேர்வு எழுதியோர்கள் விடைத்தாள்கள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் கண்காணிப்பில் திருத்தப்படுகிறது . அவற்றில் டம்மி நம்பர் கொடுக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்துவதில் முறைகேடு நடத்த முடியாத அளவில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடத்தப்படுகிறது.

விடைத்தாள்கள் திருத்தம் தேர்வு நடத்தும் கட்டுபாட்டாளரின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படுகிறது. இது மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்களின் மூலம் திருத்த படுகிறது. இது இரண்டுக்கு மூன்று முறை வரை சரிபார்க்கப்படுகிறது. விடைத்தாள்கள் திருத்தம் பணி நேர்மையாக மற்றும் மிகுந்த நம்பிக்கைக்கு உகந்த முறையில் திருத்தப்படுகிறது . இவ்வாறு மிகுந்த கவனத்துடன் நடத்தும் பணியில் முறைகேடு இருப்பாதாக கூறுவது அடிப்படைத் உண்மை தன்மையற்றது ஆகும் . என டிஎன்பிஎஸ்சி தனது தரப்பில் தெரிவித்துள்ளது.

சார்ந்த தகவல்கள்:

 மாயவலைவெல்வோம் டிஎன்பிஎஸ்சி என்ற கனவுவாரியம் வெல்வோம்

English summary
above article tell about tnpsc explanation regarding exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia