ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள் நடத்தி டி.என்.பி.எஸ்.சி. சாதனை!

Posted By:

சென்னை: ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகளை நடத்தி ஆட்களை அரசு பணிகளுக்காக தேர்வு செய்துள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) சாதனை படைத்துள்ளது.

இத்தகவல் தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள் நடத்தி டி.என்.பி.எஸ்.சி. சாதனை!

பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை (2009 முதல் 2014 வரை), சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவதுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக வெளியிடப்படும் தேர்வு அறிவிக்கைகளின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2012-13ஆம் ஆண்டில் மட்டும் 51 சதவீதம் அளவுக்கு தேர்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அந்த ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

அந்த ஆண்டில், பணி நியமனத்துக்காக மட்டும் 15 ஆயிரத்து 668 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்வு செய்துள்ளதன் மூலம் டி.என்.பி.எஸ்.சி சாதனை படைத்துள்ளது. இந்தத் தேர்வுகளின் ஏராளமானோர் அரசு பணியாணையைப் பெற்றுள்ளனர்.

English summary
Tamilnadu Public Service Commission(TNPSC) has conducted 56 written exams for various posts in last year. The Report of TNPSC`s exams has been tabled in Tamilnadu Legislative Assembly.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia