வெளிநாட்டவருக்கு பணி வழங்குவது குறித்த சர்ச்சைக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம்

Posted By:

டிஎன்பிஎஸ்சியின் சமிபத்திய அறிக்கையில் வெளிநாட்டவருக்கு வேலை பெற அறிவிக்கையில் அனுமது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதனை எதிர்த்து பலர் கருத்து தெரிவித்தனர்.

டிஎன்பிஎஸ்சி வெளிநாட்டவருக்கு விளக்கம் அளித்துள்ளது

டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்பு சரியில்லை என்றும் தமிழர்க்கே இதனை வழங்க வேண்டும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது அதனை அடுத்து டிஎன்பிஎஸ்சி வளாகத்தில் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் டிஎன்பிஎஸ்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதனை அடுத்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் வெளிநாட்டவருக்கு வேலை அளிப்பது குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிக்கவில்லை. தமிழகத்தில் வேலை வாய்ப்பு பெற நேபாளம்,பூட்டான் போன்றோர் தமிழக அரசின் தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று பதில் அளித்தது. தமிழ்நாட்டில் அதிக அளவில் வேலை செய்யும் நேபாளம் மற்றும் பூட்டானை சேர்ந்தோர் தேர்வெழுத தமிழக அரசின் தகுதி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் .

தகுதி சான்றிதழ் பெற தமிழக அரசின் எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வுக்கு உட்ப்படுத்தப்பட்டு தேவையான சான்றிதழ் அளிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட நபருக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் அளிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்தது.

டிஎன்பிஎஸ்சியின் அறிவிக்கையை தவறாக புரிந்து கொண்டு அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டிஎன்பிஎஸ்சி தனது விதிமுறைகள் மற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுவதாக அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சியின் விளக்கம்  அளித்துள்ளதன்  மூலம் எழுந்த சிக்கல்களுக்கும் , கருத்துகளுக்கும் சரியான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எழுந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளன. 

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு 

தமிழ்நாட்டின் போட்டி தேர்வு வாரியங்களின் தகவல்கள்

English summary
here article tell about tnpsc explanation regarding appointment issues

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia