குரூப் 2ஏ போட்டி தேர்வுகள் முடிந்தாகிவிட்டது விடைகள் கட் ஆஃப் என்னவாக இருக்கும் ?

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களே உங்களுக்கான குரூப் 2ஏ தேர்வு முடிந்துவிட்டது . தேர்வுக்கான கீ ஆன்ஸர் கிடைத்துவிட்டது . இனி கட் ஆஃப் பற்றிய சிந்தனைகள் பலரை ஆட்கொள்ளும் அந்த அளவுக்கு மெனகெடலில் இருப்பிர்கள்.

குரூப் 2ஏ தேர்வு முடிவு  கட் ஆஃப் தேர்வுத்தாள் விடைகள் பற்றி அறிய காத்திருக்கவும்

போட்டி தேர்வுக்கு ஆன்சர்கள் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன . இணையத்தளத்தில் விடைகளை பார்த்து குழப்பத்தில் இருக்கின்றனர் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எழுதியோர்கள் அனைவருக்குமான பொதுத்தகவல்கள் தனியார் இணையத்தளத்தில் விடைகள் சரியாக கொடுக்கப்படவில்லை ஆதலால் போட்டிதேர்வு எழுதியோர்கள் அனைவருக்கும் இந்த தகவல்களை கரியர் இந்தியா சொல்ல கடமைபட்டுள்ளது.

போட்டி தேர்வு எழுதியோர்கள் அனைவருக்குள் கட் ஆஃப் குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை . ஒவ்வொரு தனியார் வெப்சைட்களும் தனித்தனியாக தங்கள் விடைகளை தெரிவித்து குழப்பத்தில் ஆழ்த்தும் டிஎன்பிஎஸ்சி அஃபிஸியல் வெப்சைட்களில் விடைகள் வரும்வரை காத்திருத்தல் நலம் ஆகும்.

கேள்விகள் சற்று கடினமாக இருந்தன அடிப்படையாக பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன . கவனக்குறைவு காரணமாக நிறைய தவறுகள் நடக்கும் வாய்ப்புள்ளது . கணிதம் பகுதி தேர்வு நேரத்தில் கொஞ்சம் மாறியுள்ளதால் நன்றாக செயல்பட முடியாமல் போனது என்றும் தேர்வு எழுதியோர்கள் கருத்து தெரிவித்தனர் . ஆனாலும் இயன்ற அளவில் கேள்விகளை சமாளித்துள்ளனர்.

போட்டி தேர்வு எழுதிய திருமதி . பிரியாலோகேஷ் அவர்களிடம் கேட்டபோது கேள்விகள் சற்று எதிர்பாராத விதத்தில் இருந்தது என்றும் ஆனால் சமாளிக்க கூடிய அளவில் இருந்ததாக கூறினார்கள் . அவ்வாறே கேள்விகளுக்கான விடைகளை கண்டறிந்த திருமதி பிரியா லோகேஷ் அவர்கள் பல தனியார் நிறுவனத்தளங்களில் இருந்த முரணான விடைகளை கண்டு கூறிய தகவலின்படி டிஎன்பிஎஸ்சி வெப்சைட்டில் விடைவரும் வரை தேர்வு எழுதியோர்கள் காத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.

போட்டி தேர்வெழுதிய நவீண் என்பவர் கூற்றுப்படி கேள்வித்தாள் சற்று கடினமாக இருந்தது என்றும் , குரூப் 2ஏ வில் கேட்கப்பட்ட கேள்விகள் பொதுஅறிவு பாடத்தில் பல பாடங்களில் அடிப்படையாக இருந்தது என்றும் கூறினார் . இவ்வாறு கேள்விகள் குறித்து பலகூற்றுகளை கூறினார்கள் தேர்வு எழுதியோர்கள் . இருப்பினும் போட்டி தேர்வு என்பதால் நாம் யாரையும் குறைகூற முடியாது. ஆனால் போட்டி தேர்வின் எண் திசைகளையும் எதிர்கொண்டு சென்றால்தான் வெற்றிக்கணிக்கிட்டும் .

போனது போகட்டும் இருக்கிறது இருகட்டும் எதைப்பற்றியும் அஞ்சாமல் இருங்கள் . தேர்வு முடிந்துவிட்டது அடுத்தது என்ன என்று யோசிபோம் . ஓய்வு எடுங்கள் நல்ல உறக்கம் கொடுத்து உடல் மற்றும் மனதை சோம்பலில் இருந்து மீட்டெடுங்கள் .

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கு தேவையான வினாவிடைகள் பயிற்சி செய்யுங்க படியுங்க 

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நல்லா படிங்க

English summary
here article tell about tnpsc group 2A examination answer key and analysis

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia