குரூப்-2 தேர்வு மூலம் 1,863 பணியிடங்கள்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Posted By:

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 தேர்வை நடத்தவுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

இந்தத் தேர்வுக்கு நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய தலைவர்(பொறுப்பு) சி. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

குரூப்-2 தேர்வு மூலம் 1,863 பணியிடங்கள்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

1863 இடங்கள்

மொத்தம் 1,863 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வாகும் இது. மொத்தம் 33 துறைகளில் இந்த இடங்கள் காலியாக உள்ளன.

நேர்முகத் தேர்வு கிடையாது

இந்த இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 மூலம் தேர்வு செய்ய உள்ளது. நேர்முகத்தேர்வு இல்லாமல் எழுத்து தேர்வை மட்டும் மட்டும் நடத்தி அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படை மற்றும் ஒதுக்கீட்டு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அறிவிப்பு வெளியீடு

அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் ஆன் லைன் மூலம் உடனே விண்ணப்பிக்கலாம்.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்தப் பணியிடங்களுக்கு.விண்ணப்பிக்க நவம்பர் 11-ந்தேதி கடைசி நாள். அன்று இரவு 11.59 மணிவரை விண்ணப்பம் செய்ய முடியும்.

33 துறைகள்

பள்ளிக்கல்வித்துறை, பதிவுத்துறை, சிவில் துறை, பொதுசுகாதாரம், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட 33 வகையான துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெறுகிறது என்றார் அவர்.

English summary
Tamilnadu Pulic service commisson (TNPSC) has announced Group-2 exams for filling 1,863 jobs in various departments. The last date for applying this jobs is November 11.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia