குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி...!!

Posted By:

டெல்லி: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தற்போது வெளியிட்டுள்ளது.

இதையடுத்து பிரதானத் தேர்வுக்கு 4,033 பேர் தகுதி பெற்றுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த பிரதான தேர்வு தேர்வினை எழுத தகுதி படைத்துள்ளனர். பிரதானத் தேர்வு ஜூலை 29 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி...!!

இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் குரூப் 1 தொகுதியில் 74 காலிப் பணியிடங்கள் இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8-ல் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில், 1,17,696 பேர் கலந்து கொண்டு தேர்வை எழுதினர்.

இந்தத் தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதிலிருந்து முதன்மைத் தேர்வுக்கு 4 ஆயிரத்து 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வு வரும் ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
TamilNadu Public Service Commission(TNPSC) has announced Group-1 preliminary exam results. In this exam 4,033 students has moved to main exams. For more details students can logon into TNPSC site http://www.tnpsc.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia