குரூப்-1 தேர்வு அறிவிச்சாச்சு... ஆகஸ்ட் 9 தான் விண்ணப்பிக்க கடைசி நாள்!

Posted By:

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குரூப்-1 தேர்வு அறிவிச்சாச்சு... ஆகஸ்ட் 9 தான் விண்ணப்பிக்க கடைசி நாள்!

74 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள், உதவி வணிக வரி அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள் என பல பதவியிடங்கள் குரூப்-1-ன் கீழ் வருகின்றன. இந்த ஆண்டு இந்தப் பிரிவில் மொத்தம் 74 பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர்

துணை ஆட்சியர் பணியிடங்கள்-19, காவல் துணை கண்காணிப்பாளர்கள்-26, உதவி வணிக வரி அலுவலர்கள்-21, மாவட்ட பதிவாளர்கள்-8 என குரூப் 1 தொகுதியில் காலியாகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. காலியாகவுள்ள இந்த 74 பணியிடங்களை நிரப்ப தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தவுள்ளது.

எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்....

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம்.

இறுதித் தேர்வு எழுதியவரும் விண்ணப்பிக்கலாம்....

3 அல்லது 4 ஆண்டு பட்டப் படிப்புக்கான இறுதித் தேர்வு எழுதி முடித்து காத்திருப்போரும் தேர்வை எழுதலாம்.

ஆகஸ்ட் 9 கடைசி நாள்

இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி கடைசி நாளாகும்.

3 தேர்வுகள்

இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளைக் கொண்டதாகும். ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறு தேர்வுக்குச் செல்ல முடியும் என்பதை மாணவர்கள் கவனிக்கவேண்டும்.

ஆட்சியராகும் வாய்ப்பு

துணை ஆட்சியர் பணிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோல துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உயர்வு பெறவும் வாய்ப்பிருக்கிறது.

நவம்பர் 8-ல் தேர்வு

முதல் நிலைத் தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடைபெறவுள்ளது என்று அந்த அரிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tnpsc has announced group-1 exam dates and the last date for applying for exams is august 9, Tnpsc said in a press release.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia