உதவிப் பொறியாளர் பணிக்கு நேர்காணல்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு!

Posted By:

சென்னை: உதவிப் பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கான நேர்காணல் வரும் 11-ல் தொடங்குகிறது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உதவிப் பொறியாளர் பணிக்கு நேர்காணல்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு!

உதவிப் பொறியாளர் (சிவில்) பிரிவில் 213 இடங்கள் காலியாகவுள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பரில் தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது.. இதில் தேர்வு பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு-நேர்காணல் ஆகியன வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதேபோல கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பிரிவில் 24 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இப்போது, சான்றிதழ் சரிபார்ப்புக்கு 57 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வு வரும் 27 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

English summary
Tamilnadu Public services Commission (TNPSC) has announced interview dates for assistant Engineers post. The exams for the posts was held last years. For more details aspirants can logon into www.tnpsc.gov.in
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia