டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் உதவி அறுவை சிகிச்சை மருத்துவ பணிக்கான தேர்வு மையங்கள் சென்னையில் மட்டுமே அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 1,141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டு இதற்கான தேர்வு வரும் பிப்ரவரி 23-ம் தேதியன்று நடைபெற உள்ளது.
முன்னதாக, இதற்கானத் தேர்வுகள் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாகக் கால்நடை பராமரிப்புத் துறைக்கான தேர்வு மையம் சென்னையில் மட்டுமே அமைக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை தேர்வு மையத்தில் மட்டுமே கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணி தேர்வு அமைக்கப்படும் எனவும், சென்னை அல்லாமல் வேறு தேர்வு மையங்களை தேர்வு செய்தவர்களுக்குத் தேர்வு மையம் குறித்த தகவல் குறுஞ்செய்தி, இமெயில் மூலம் அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












