இனி மத்திய ஆராய்ச்சி மானியத் தொகைக்கு தமிழக திறந்தநிலை பல்கலை. விண்ணப்பிக்கலாம்

Posted By:

சென்னை: மத்திய ஆராய்ச்சி மானியத் தொகை பெறுவதற்கு இனி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) 12-வது பி ஷரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதையொட்டி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இனி மத்திய ஆராய்ச்சி மானியத் தொகைக்கு தமிழக திறந்தநிலை பல்கலை. விண்ணப்பிக்கலாம்

ஏற்கெனவே இந்த அந்தஸ்தை போபால், நாசிக், கோட்டா, ஹைதராபாத் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் 12 பி அந்தஸ்தைப் பெற்றுள்ளன. தற்போது ஐந்தாவது இந்த அந்தஸ்தை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

இத்தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தேசிய மதி்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கப் போவதாக சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார்.

யுஜிசி விதிகளின்படி சென்னை, மதுரை, தருமபுரி, கோவை நகரங்களில் மையங்களை பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மதுரையில் சமுதாயக் கல்லூரியை ஏற்படுத்த இடத்தையும் பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது என்றார் சந்திரகாந்தா ஜெயபாலன்.

English summary
The Tamil Nadu Open University has become eligible to apply for Central government research grants following its inclusion under Section 12 (B) of the University Grants Commission (UGC) Act. The institution is the fifth among open universities in the country to receive the status. Already Bhopal, Nashik, Kota and Hyderabad open universities have the 12B status.The UGC has advised the TNOU to apply to the National Assessment and Accreditation Council for accreditation. TNOU Vice-Chancellor Chandrakantha Jeyabalan told journalists here on Thursday that the university had fulfilled all the criteria, including the required infrastructure.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia