தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொசைட்டியில் மார்க்கெட்டிங் வேலை!!

Posted By:

சென்னை: தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொசைட்டியில் (கோ-ஆப்டெக்ஸ்) மார்க்கெட்டிங் வேலை காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். மொத்தம் 30 பணியிடங்கள் மார்க்கெட்டிங் உதவியாளர் பிரிவில் காலியாக உள்ளன. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 33-க்குள் இருக்கலாம்.

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொசைட்டியில் மார்க்கெட்டிங் வேலை!!

தகுந்த ஆவணங்களுடன் இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 8-ம் தேதிக்குள் அனுப்பலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். தேர்வு செய்யும் நபர்கள் பட்டியல் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் சொசைட்டியின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

கூடுதல் விவரங்கள் http://www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொசைட்டியானது கோ-ஆப்டெக்ஸ் என்று பரவலாக அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளித்துறையின் கீழ் கோ-ஆப்டெக்ஸ் இயங்கி வருகிறது.

English summary
The Tamil Nadu Handloom Weavers Co-Operative Society Ltd (TNHWCS) invited applications for 30 Marketing Assistant Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 08 February 2016. The Tamil Nadu Handloom Weavers' Cooperative Society, popularly known as Co-optex, is a cooperative of traditional handloom weavers of the Indian state of Tamil Nadu. This is under the control of Department of Handlooms, Handicrafts, Textiles and Khadi (Tamil Nadu) of Government of Tamil Nadu.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia