தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்

Posted By:

சென்னை : தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 277 இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், தட்டச்சர், சர்வேயர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஜூன் 30ந் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.

 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்

காலிப் பணியிடங்கள் விபரம் - மொத்தம் 277

1. உதவி பொறியாளர் (Assistant Engineer) காலிப்பணியிடம் - 25

ஊதியம் - மாதம் ரூ. 9,300 - 34,800 + தர ஊதியம் ரூ. 4,700/-

2. சர்வேயர் (surveyor) காலிப்பணியிடம் - 19

ஊதியம் - மாதம் ரூ. 9,300 - 34,800 + தர ஊதியம் ரூ. 4,200/-

3. இளநிலை வரைவு அதிகாரி (Junior Drafting Officer) காலிப்பணியிடம் - 19

ஊதியம் - மாதம் ரூ. 5,400 - 20,200 + தர ஊதியம் ரூ. 2,800/-

4. தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) காலிப்பணியிடம் - 76

ஊதியம் - மாதம் ரூ. 5,400 - 20,200 + தர ஊதியம் ரூ. 2,800/-

5. இளநிலை உதவியாளர் (Junior Assistant) காலிப்பணியிடம் - 126

ஊதியம் - மாதம் ரூ. 5,400 - 20,200 + தர ஊதியம் ரூ. 2,400/-

6. தட்டச்சர் (Typist) காலிப்பணியிடம் - 12

ஊதியம் - மாதம் ரூ. 5,400 - 20,200 + தர ஊதியம் ரூ. 2,800/-

தகுதி - 10ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு - 01.07.2017 தேதியின் படி 18 வயதிலிருந்து 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

தேர்வு செய்யப்படும் முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் - பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினர் ரூ. 500/-ம் மற்ற பிரிவினர் ரூ. 250/-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடைசி தேதி - 30.06.2017

எழுத்துத் தேர்வு - ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் விபரங்களுக்கு www.tnhbrecruitment.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Tamilnadu Housing Board (TNHB)has advertised a notification for the recruitment of 277 Various Vacancies,Eligible candidates can apply online till 30.06.17

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia