பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... ரிசல்ட் பார்த்தாச்சா?

Posted By:

சென்னை : தொழில் நுட்ப கல்வி இயக்கம் நடத்திய பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு எனப்படும் பட்டய தேர்வு முடிவுகள் இன்று ஜூன் 5ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு , அரசு உதவி பெறும் , தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைப்பெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜுன் 5-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... ரிசல்ட் பார்த்தாச்சா?

இந்த நிலையில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய ஏப்ரல் 2017 பட்டயத் தேர்விற்கான, தேர்வு முடிவுகள் இன்று ஜூன் 5ந் தேதி www.tndte.gov.in மற்றும் http://intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tndte.gov.in , http://intradote.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பாதுகாப்பு கேள்விக்கு பதிலளித்தால் தேர்வு முடிவுகளை எளிதாக காணலாம்.

English summary
TNDTE diploma result 2017 for semester exams results declared today by the Tamil Nadu Directorate of Technical Education (TNDTE).
Please Wait while comments are loading...