10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 94.5 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

By Kani

தற்போது வெளியாகி உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த தேர்ச்சி விகித விபரத்தை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

இதில் 94.5 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும்,ஈரோடு மாவட்டம் 98.38 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 98.26 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!

பாடவாரியாக தேர்ச்சி விபரம்:

மொழிப்பாடம்96.42 %
ஆங்கிலம்96.50 %
கணிதம்96.18 %
அறிவியல்98.47 %
சமூக அறிவியல்96.75 %

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:

சிவகங்கை98.50 %
ஈரோடு98.38 %
விருதுநகர்98.26 %
கன்னியாகுமரி98.07 %
ராமநாதபுரம்97.94 %

மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள்:

481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள்9402
451 - 480 மதிப்பெண்கள் பெற்றவர்கள்56,837
426 - 450 மதிப்பெண்கள் பெற்றவர்கள்64,144
401 - 425 மதிப்பெண்கள் பெற்றவர்கள்76,413
301 - 400 மதிப்பெண்கள் பெற்றவர்கள்3,66,084
201 - 300 மதிப்பெண்கள் பெற்றவர்கள்3,12,587
176 - 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள்26,248
175 மற்றும் அதற்கும் கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் 38,682

இந்தாண்டு 5456 அரசுப்பள்ளிகள் தேர்வு எழுதியதில் மொத்தம் 1687 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேர்வு எழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.4 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.5 சதவீதமாகவும் உள்ளது.

10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்!10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN SSLC Result 2018: Tamil Nadu SSLC Result Announced on tnresults.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X