கொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பிற்காக பொதுத் தேர்வு ஜூன் 3-வது வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்ததும் வகையில் கடந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 40 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என அனைத்தும் மூடப்பட்டு, தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
மேலும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெற்றது. 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.
இதனிடையே, பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துவந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவில்லை எனவும், ஊரடங்கு உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என முதல்வர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் ,கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இது குறித்து கூறுகையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாத்தில் தேர்வுகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












