மதிப்பெண்கள் இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்! பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு!!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் தங்களது விருப்பப் பாடத்தின் மதிப்பெண்களும் இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதாவது, தமிழ் அல்லாமல், மற்ற மொழிகளை விருப்ப பாடமாக எடுத்து படிக்கும் தமழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், அந்த பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அதையும் சேர்த்து அவர்களுக்கு 600 மதிப்பெண் கொண்ட தேர்வாக இனி நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்தமிழ் அல்லாமல், ஹிந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை விருப்ப பாடமாக தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் உள்ளனர். அந்த மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அதாவது, 10ம் வகுப்பு மாணவர்கள் தற்போது வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்கள் என 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுகிறார்கள். இந்த ஐந்து பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சிக்கான மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டு வருகிறது.

 மதிப்பெண்கள் இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்! பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு!!

இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு 10-ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே மாணவர்கள் உயர்க்கல்விக்கு செல்கின்றனர்; குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரையிலாவது தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் படிக்க வேண்டும், தேர்வெழுத வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழ் அல்லாத பிற சிறுபான்மை மொழிகளை கொண்ட மாணவர்கள் விருப்ப பாடத்தை எழுதினாலும் அதில் பெற்ற மதிப்பெண்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத நிலை இருந்தது.

ஆனால், இனிமேல், ஹிந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு புதிய அறிவிப்பின்படி, விருப்ப பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்றும், அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப பாடத்தின்படி தேர்வெழுதும் மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அவர்கள் இனி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுடன், 6-வதாக தனது விருப்ப மொழி பாடத்திலும் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அந்த மதிப்பெண்களுடன் சேர்த்து மொத்தம் 600 மதிப்பெண்களுக்கான தேர்வாக சான்றிதழில் இடம்பெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் என்றும், 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டு (2024-2025) முதல் அமலுக்கு வரும் எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamil Nadu School Education Department has released Government Order revising the total marks for the students who opt for other mother languages as main than Tamil for the 10th class public exam. Based on the order, as per the new procedure, the students who come under this category (students who chose to study and write optional subjects) will have 6 subjects and will have to write for a total of 600 marks, while five subjects and a total of 500 marks will continue as usual for other students who do not opt for optional subjects.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+