TN School Education Notification 2023: பள்ளி திறக்கும் நாளில் பாடப்புத்தகங்கள்?

தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான புத்தகங்கள் எப்போது வழங்கப்படும் என்ற தகவல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை, மாவட்ட விநியோக மையங்களில் இருந்து முன்கூட்டி பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் புத்தகங்கள்...!

தமிழ்நாடு கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி, காலை 10 மணிக்கு வெளியாக உள்ளன.

இதை அரசு இணையதளங்கள், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் நூலகங்கள் என, ஐந்து வழிகளில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் 10ஆம் வகுப்பு படித்து முடித்தனர்.

இந்த மாணவர்களுக்கு, ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது.

பொதுத் தேர்வு முடிவுகளை, மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார்.

சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியாக உள்ளன. மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்தத் தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் 3,260 தேர்வு மையங்களில் எழுதினர்.

எவ்வாறு அறிந்து கொள்வது?

www.dge1.tn.nic.in ,

www.dge2.tn.nic.in ,

www.dge.tn.gov.in ,

www.tnresults.nic.in.

ஆகிய இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இதற்குத் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை மாணவர்கள் உள்ளிட வேண்டியது அவசியமாகும்.

செல்போன்....!

மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பிற வழிகள்?

அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களில் (National Informatics Centres) தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் தவிர்த்து, அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறக்கும் நாளிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு, பாட நுால்கள், நோட்டுகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN School Textbooks 2023: The school education department has issued an order to provide textbooks and notes to government school students on the opening day of the school after the summer vacation.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+