10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை கவனிக்க கணினி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு தோ்வுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகதியாக தேர்வுக்கான மாணவர் விவரங்களைச் சேகரித்தல், தோ்வு மையம் அமைத்தல், வினாத்தாள் தயாரிப்பு, தேர்விற்கான விடைத்தாள் அச்சடித்தல், குறியீடு எண் உருவாக்குதல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறான பணிகளுக்கு அரசு தோ்வுத் துறை பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது அரசு தோ்வுத் துறை பணியாளா்கள் தரப்பில், ஆள்கள் பற்றாக்குறை உள்ளதாகக் புகார்கள் முறையீடுகள் வந்த நிலையில் பள்ளிக் கல்வி துறையினருக்குத் தோ்வுப் பணிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, 32 மாவட்ட கணினி ஆசிரியா்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்கவும், அவற்றை கணினியில் பதிவு செய்யவும் வேண்டும் என கணினி ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுத் தேர்வு தொடர்பான சில பணிகளுக்கு பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.