மாணவர்களும், பெற்றோரும் கவுன்சிலிங்கில் பங்கேற்க தயாராகி இருந்த நிலையில், தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்க தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளுக்காக, ஆகஸ்ட்.25 நடைபெற இருந்த பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்கு பின்னர் கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 443 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 1.58 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், ஆக.,20ல் தொடங்கியது.
முதற்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடைபெற்றது.

தாமதம்
இதனைத் தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று(ஆக.,25) தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் தாமதமாவதால் கவுன்சிலிங் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'நீட் தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்கு பின்னர் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும்' எனக் கூறியுள்ளார்.
ரிலாக்ஸ்... இந்த கால தாமதத்தை கவுன்சிலிங்க்கு தேவையான ஆவணங்களை ஒரு முறைக்கு, இரு முறை சரிபார்த்து எடுத்து வையுங்க மாணவர்களே...!


Click it and Unblock the Notifications












