Kalvi TV vs Bigg Boss: இது பிக் பாஸ் இல்லைங்க, "பிக் ஜீனியஸ்"- கலைகட்டும் கல்வி சேனல்

தொலைக் காட்சிகளில் அன்றாடம் பெரும்பாலும் சீரியல், விளையாட்டு, அல்லது பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் கல்வித் தொலைக் காட்சி அனைத்திற்கும் மாற்றாக திட்டமிடப்பட்

By Saba

பல தனியார் தொலைக் காட்சி நிறுவனங்கள் பொழுது போக்கு, செய்தி, நாடகம் என வீட்டில் உள்ள பெரியவர்களையே குறிவைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த நிலையில், தற்போது தொடங்கப்பட்டுள்ள கல்வி தொலைக் காட்சி மாணவ, மாணவியருக்கான புதிய தளமாக அமைக்கப்பட்டுள்ளது.

Kalvi TV vs Bigg Boss: இது பிக் பாஸ் இல்லைங்க..

குறிப்பாக, வெளிநாடு, அண்டை மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு நம் மாநிலத்தில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் போன்ற நிகழ்சிகளுக்கு மத்தியில் குழைந்தைகளுக்கு என பிக் ஜீனியஸ் உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகள் இந்த தொலைக் காட்சியில் இடம்பெற்றுள்ளது.

கல்வி தொலைக் காட்சி

கல்வி தொலைக் காட்சி

தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட கல்வித் தொலைக் காட்சி சமீபத்தில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இத்தொலைக் காட்சி பள்ளி மாணவர்களிடையே கற்றலை மேம்படுத்தும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் முறையில் செயல்பட்டு வருகிறது.

நாட்டிற்கே முன்னோடி

நாட்டிற்கே முன்னோடி

இதில் சிறப்பம்சமே நம் நாட்டில் இது போன்று கல்விக்கு என எந்த மாநிலமும் இதுவரை தனியே தொலைக் காட்சி தொடங்கியது இல்லை என்பதுதான். அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழகம் இத்தொலைக் காட்சியினை அறிமுகம் செய்து தனித்தன்மை பெற்றுள்ளது.

தனியார் தொலைக் காட்சி

தனியார் தொலைக் காட்சி

பல தனியார் தொலைக் காட்சிகளில் அன்றாடம் பெரும்பாலான நேரங்களில் சீரியல், விளையாட்டு, அல்லது பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் கல்வித் தொலைக் காட்சி இது அனைத்திற்கும் மாற்றாக திட்டமிடப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

யூடியூபிலும் கல்வி தொலைக் காட்சி

யூடியூபிலும் கல்வி தொலைக் காட்சி

அரசு கேபிளில் 200ம் சேனலில் கல்வி தொலைக்காட்சியானது இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் முன்னனி டி.டி.ஹெச் சேவையிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேபிள் டிவியை தவிர இணையதளம், யூடியூப் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சியினை காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிக் ஜீனியஸ்

பிக் ஜீனியஸ்

கல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிக் பாஸை போல பிக் ஜீனியஸ், சூப்பர் சிங்கரை போல் சூப்பர் டேலண்ட்ஸ் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளது.

போட்டித் தேர்வு மாணவர்களே...

போட்டித் தேர்வு மாணவர்களே...

கல்வி, பொழுது போக்கைத் தவிர வேலைவாய்ப்புத் தகவல்கள், கலை, மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி என அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

நேரம் மற்றும் நிகழ்ச்சி

நேரம் மற்றும் நிகழ்ச்சி

காலை

  • 5:00 - 6:00 வாகை சூடவா!
  • 6:00 - 6:30 பூங்குயில் கானம்
  • 6:30 - 7:00 ஊனுடம்பு ஆலயம்!
  • 7:00 - 7:30 கதை களஞ்சியம்
  • 7:30 - 8:00 வருக! வருகவே!!
  • 8:00 - 8:30 பாடு...ஆடு... பண்பாடு
  • 8:30 - 9:00 கல்வி உலா
  • 9:00 - 9:30 சிறகை விரி
  • 9:30 - 10:00 பேசும் ஓவியம் (கார்ட்டூன்)
  • 10:00 - 10:30 பாடுவோம் படிப்போம்
  • 10:30 - 11:00 கவிதை பேழை
  • 11:00 - 11:30 ஆய்வுக் கூடம்
  • 11:30 - 12:00 ஜியோமெட்ரி பாக்ஸ்
  • 12:00 - 12:30 உலகம் யாவையும்
  • 12:30 - 12:45 கல்லூரி வாயில்
  • 12:45 - 1:00 வேலைவாய்ப்பு செய்திகள்
  • பிற்பகல்

    • 1:00 - 1:30 ஆங்கிலம் பழகுவோம்
    • 1:30 - 2:00 முப்பரிமாணம்
    • 2:00 - 2:30 கலைத் தொழில் பழகு
    • 2:30 - 3:00 எதிர்கொள் வெற்றிகொள்
    • 3:00 - 3:30 ஒரு ஊர்ல
    • 3:30 - 4:00 யாமறிந்த மொழிகளிலே
    • 4:00 - 4:30 வலைத்தளம் வசப்படும்
    • 4:30 - 5:00 கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
    • 5:00 - 5:30 மைதானம்
    • 5:30 - 6:00 நிலா
    • 6:00 - 6:30 கல்வி செய்திகள்
    • 6:30 - 7:00 மேடைப் பூக்கள்
    • 7:00 - 7:30 கல்லூரி மலர்கள்
    • 7:30 - 8:00 சூப்பர் டேலேண்ட்ஸ் ஜூனியர்
    • 8:00 - 8:30 சூப்பர் டேலண்ட்ஸ் சீனியர்
    • 8:30 - 9:00 பிக் ஜீனியஸ்
    • 9:00 - 10:00 வாகை சூடவா!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Kalvi TV Program 2019: List For Kalvi Tholaikatchi Schedule, Timing And Topics Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X