தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் கடந்த மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சோியில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியுள்ளனா். தனித்தோ்வா்கள் உள்பட மொத்தமாக 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 போ் தோ்வு எழுதியுள்ளனா்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததையடுத்து நாளை (புதன் கிழமை) 12ம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ள தோ்வு முடிவுகளை www.dge.tn.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
இதனிடையே, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவித்த 2 வினாடியில் ,மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலமாக வந்து சேரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
English summary
TN HSC 12 Result 2018 releasing tomorrow dge.tn.nic.in


Click it and Unblock the Notifications












