தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு என்றுமே பொதுத் தேர்வு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பரவலாக செய்திகள் பரப்பப்படுகின்றன. மாநில அரசு விரும்பினால் பொதுத் தேர்வைக் கொண்டு வரலாம் என்று தான் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படிக் கொண்டு வருவதாக இருந்தால் அதற்காக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டு மட்டுமல்ல, இனி எப்போதும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றார்.
For Quick Alerts
For Daily Alerts