தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் தற்போது வரை 65 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் குழந்தைகளுக்கு ஏற்ற எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டன.
குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வரும் சேரத்தில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் முதல் கட்டமாக 2,381 நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தமிழக அரசு நடப்பு கல்வியாண்டில் தொடங்கியது.
இதில், அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகள், இலவச கற்றல் உபகரணங்கள், கல்விக் கட்டணம் இல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர்.
இப்பள்ளிகளில் தற்போது வரை 65 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












