அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மூன்றாம் நிலை ஆய்வக நுட்பநர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்ட 687 பேருக்கான நியமன ஆணை சென்னையில் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மூன்றாம் நிலை ஆய்வக நுட்பநர்கள் பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் சமீபத்தில் தேர்வு நடத்தியது. இதில், தேர்வு செய்யப்பட்ட 687 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினர்.
English summary
TN govt provide Job Officer for 687 Laboratory Technicians
Story first published: Friday, October 26, 2018, 10:42 [IST]


Click it and Unblock the Notifications












