பள்ளிகளுக்கு நிதி திரட்ட தனி இணையதளம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலான தனி இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.

பள்ளிகளுக்கு நிதி திரட்ட தனி இணையதளம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 

இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தொழில் நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் இரண்டு சதவிகித தொகையை சமூகப் பொறுப்பு செயல்பாடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது இந்திய நிறுவன சட்டப் பிரிவில் சட்டமாக உள்ளது. அதன்படி, பல நிறுவனங்கள் தன்னாட்சி தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், அல்லது நேரடியாக பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி உதவி வழங்குவது வழக்கம்.

தற்போது, இச்சட்டத்தை உறுதி செய்யும் வகையிலும், நிதியுதவி வழங்கும் நிறுவனங்களுக்கும், ஆர்வலர்களுக்கும் உதவிடும் வகையிலும் ‌https://contribute.tnschools.gov.in/csr/#/contribute என்னும் இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த இணையவழி நிதி திரட்டும் வசதியை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது.

இந்த இணையவழியில் திரட்டப்படும் நிதி, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடா்பான விவரங்களை பொது மக்கள் இணையவழியிலேயே நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இணையவழியில் திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகமானது தொடர்பு அலுவலகமாகச் செயல்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Govt launche funding platform to improve School infrastructure
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X