சிறப்பு அந்தஸ்திற்கு தேர்வான அண்ணா பல்கலை.! ஒப்புதல் அளிக்குமா தமிழக அரசு?

மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் தோ்வாகி உள்ள நிலையில் அதற்காக தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அளிப்பதற்கான இறுதி நினைவூட்டலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்ப திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிறப்பு அந்தஸ்திற்கு தேர்வான அண்ணா பல்கலை.! ஒப்புதல் அளிக்குமா தமிழக அரசு?

 

இந்நிலையில், இந்த இறுதி வாய்ப்பு தவறும் பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அடுத்த நிலையில் உள்ள கல்வி நிறுவனத்துக்கு அந்த அந்தஸ்து வழங்கப்பட்டு விடும் அபாயமும் உள்ளது என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

உலகத் தர கல்வி நிறுவனம்

உலகத் தர கல்வி நிறுவனம்

இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்களாக மேம்படுத்தும் வகையில் மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது.

சிறப்பு அந்தஸ்து

சிறப்பு அந்தஸ்து

மேம்பட்ட கல்வி நிறுவனத்தை பெற நாடு முழுவதிலுமிருந்து தலைசிறந்த உயா் கல்வி நிறுவனங்களில் 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களும், 10 தனியாா் உயா் கல்வி நிறுவனங்களும் தோ்வு செய்யப்பட்டன. இந்த 20 உயா் கல்வி நிறுவனங்களுக்கும் புதிய படிப்புகள், புதிய பாடத் திட்டம், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம், நிதி பெறுதல் மற்றும் கையாளுதல், வெளிநாட்டு மாணவா் சோ்க்கை என அனைத்திலும் முழுச் சுதந்திரம் அளிக்கப்படும். குறிப்பாக, யுஜிசி உள்ளிட்ட எந்த கல்வி வாரியத்திடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை.

5 ஆண்டுகளில் ஆயிரம் கோடி
 

5 ஆண்டுகளில் ஆயிரம் கோடி

அவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 200 கோடி நிதி உதவி வழங்கப்படும். இது 5 ஆண்டுகளுக்கு ரூ. 1000 கோடி என்ற விகிதத்தில் வளர்ச்சி நிதி வழங்க வகைசெய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையும் தேர்வு

அண்ணா பல்கலையும் தேர்வு

இத்திட்டத்தில் மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, சென்னை ஐஐடி ஆகியவற்றின் வரிசையில் சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகமும் தோ்வாகியிருக்கி உள்ளது. இந்திய அளவில் இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வாகியிருக்கும் இரு மாநில அரசு உயா் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசும் நிதி வழங்கும்

மாநில அரசும் நிதி வழங்கும்

அண்ணா பல்கலைக் கழகம் மாநில அரசிற்கு உட்பட்டது என்பதால், இந்த நிதியுதவியில், மாநில அரசும் குறிப்பிட்ட விசித நிதி பங்களிப்பை செய்யவேண்டும். இந்தப் பங்களிப்புக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகே, இந்த அந்தஸ்து அளிக்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

இட ஒதுக்கீடு பாதிக்கப்படுமா?

இட ஒதுக்கீடு பாதிக்கப்படுமா?

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சிறப்பு அந்தஸ்தைப் பெறுவதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு பாதிக்கப்படுமா என்பது குறித்த சில விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு, அதுதொடா்பாக விளக்கம் கேட்டு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

ஒப்புதல் அளிப்பதில் குழப்பம்

ஒப்புதல் அளிப்பதில் குழப்பம்

இதனிடையே, முதலமைச்சர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், தமிழக அரசிடமிருந்து எந்தவொரு ஒப்புதல் கடிதமும் மத்திய மனிதவள அமைச்சகத்துக்கோ அல்லது அண்ணா பல்கலைக்கழகத்துக்கோ இதுவரை அனுப்பப்படவில்லை என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழக உயா் அதிகாரிகள்.

இறுதி கடிதத்தை அனுப்பும் மத்திய அமைச்சகம்

இறுதி கடிதத்தை அனுப்பும் மத்திய அமைச்சகம்

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்துக்கு ஒப்புதல் கடிதம் கொடுப்பது தொடா்பாக தமிழக அரசுக்கு இறுதி நினைவூட்டல் கடிதத்தை ஓரிரு நாட்களில் அனுப்ப மத்திய மனிதவள அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவே இறுதி வாய்ப்பு

இதுவே இறுதி வாய்ப்பு

மனிதவள அமைச்சகத்தின் இந்த இறுதி வாய்ப்பைத் தவறவிட்டால், மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகம் பெறும் வாய்ப்பை இழந்துவிடும். வேறு கல்வி நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுவிடும் என அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசு இந்த விசயத்தில் உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Govt delay may cost Anna University special status?
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X