தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-ல் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு அந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. மேலும், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-ல் இருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பிசி, எம்.பி.சி, பிசி முஸ்லீம் உள்ளிட்ட பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-ல் இருந்து 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில் இதனை தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த திடீர் உத்தரவால் பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications












