கல்வி உதவித்தொகை 2 மடங்கு உயர்வு..! மகிழ்ச்சியில் திளைக்கும் மாற்றுத் திறனாளிகள்...

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை காரணமாக 22,300 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாற்று திறனாளி மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
இதுதொடர்பான ஆணையை தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ளார்.

தில் அவர் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையாக அவர்கள் பயிலக் கூடிய வகுப்பு, படிப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு 1,000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2013-ம் நிதியாண்டில் இருந்தே இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திட்டத்தை ஆய்வு செய்து அவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

கல்வி உதவித்தொகை 2 மடங்கு உயர்வு..! மகிழ்ச்சியில் திளைக்கும் மாற்றுத் திறனாளிகள்...

இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து வந்தது. தொடர்ந்து இந்த கோரிக்கை பரிசீலனையில் இருந்த நிலையில் 2023-24 நிதியாண்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் செலவு ஏற்பட்டாலும் இரண்டு மடங்காக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயரும்.

6 முதல் 8-ம் வகுப்பு வரை வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 3000 ரூபாயில் இருந்து 6000 ரூபாயாக உயர்கிறது.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு கல்வி உதவித் தொகை 4,000 ரூபாய் இருந்து 8000 ரூபாயாக உயர்கிறது.

பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபாய் இனி 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தொழிற்கல்வி, முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 7,000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக மாறப் போவதால் அவர்கள் பெரும் உற்சாகத்திலும், மகிழ்ச்சியிலும் திளைத்து வருகின்றனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
In the Tamil Nadu Assembly earlier this year, Chief Minister M.K. Stalin had said ₹2 crore would be additionally allocated to the board to increase financial assistance provided to persons with disabilities and their families. he Department for the Welfare of Persons with Disabilities has increased financial assistance, including scholarships, compensation for accidents, and medical expenses, provided through the Tamil Nadu Welfare Board for Persons with Disabilities.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+