தமிழகத்தில் தற்போது இன்ஜினியரிங் (பி.இ, பி.டெக்) படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று ஒரே நாளில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்காக 32 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நேற்று (மே 6) தொடங்கியது. மொத்தம் 1.50 லட்சம் இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுவர். இந்த கலந்தாய்வை (கவுன்சிலிங்) அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் மிகச்சிறப்பான முறையில் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை மாணவ-மாணவிகள் நேற்று பிற்பகல் முதல் செவ்வனே செய்து வருகின்றனர்.

பிளஸ்-2 தேர்வில் கணித பாடத்தில் அதிகமானவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதே நேரத்தில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் செஞ்சுரி அடித்தவர்கள் எண்ணக்கை குறைந்தாலும் ஆர்வத்துடன் இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று மாலை வரை 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 31,877 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 10 ஆயிரம் மாணவர்கள் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தினர். மேலும், 1,762 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இத்தகவலை பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 6-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் மாணவர்கள் ஆர்வத்துடன் முதல் 2 நாட்களிலேயே அதிக அளவில் விண்ணப்பத்துள்லனர். மாணவர்கள் லேப்டாப் மூலமும், இணையவழி மையங்Kள் வழியாகவும் ஒவ்வொரு நகரங்களிலும் விண்ணப்பித்து வருகின்றனர்.
கிராமப்புற மாணவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மையங்களுக்கு சென்று www.tneaonline.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்து தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர்.
பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு இருப்பதால் இந்த வருடம் அதிகளவில் மாணவ, மாணவிகள் விண்ணப்பிப்பார்கள் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications












