ஏழை மாணவி ரேடியோலஜி பயில உதவினார் முதல்வர் ஜெயலலிதா!

Posted By:

சென்னை: ஏழை மாணவி ரேடியோலஜி படிப்பு பயில்வதற்காக தேவைப்பட்ட நிதியுதவியை அதிமுக சார்பில் வழங்கி உதவியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவி யசோதா. இவரது தந்தை சென்னகிரி ஊராட்சியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சித்தன். யசோதாவுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி ரேடியோலஜி படிப்பதற்கு இடம் கிடைத்தது. ஆனால் அதற்குத் தேவையான கட்டணம் ரூ.80 ஆயிரத்தைச் செலுத்த யசோதாவிடம் நிதி வசதியில்லை.

ஏழை மாணவி ரேடியோலஜி பயில உதவினார் முதல்வர் ஜெயலலிதா!

பத்திரிகை மூலம் இந்தத் தகவலை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, யசோதா கல்வி பயில்வதற்குத் தேவையான நிதியை வழங்க உத்தரவிட்டார். எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து யசோதாவின் உயர் கல்வி பயில ரூ.80 ஆயிரத்து 81-க்கான வரைவோலை நேற்று வழங்கப்பட்டது.

கல்வி, புத்தகம், தேர்வு, விடுதி ஆகியவற்றுக்கான கட்டணம் இதுவாகும்.

English summary
Tamilnadu Chief Minister J. Jayalalitha has helped a poor student who wants to join B.sc Radiology. J. Jayalalitha has given a cheque fro Rs. 80,000.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia