தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான மவுசு அதிகரித்து வருகிறது. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 70,326 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து இந்த அரசு கல்லூரிகளி மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. விருப்பம் உள்ள மாணவச் செல்வங்கள் http://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் ஏராளமான அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் மொத்தம் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த மே 5-ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு 70,326 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 44,321 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..
இணையதள வசதியில்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.50-ம், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் ரூ.2-ம் செலுத்தினால் போதும்.
இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை http://www.tngasa.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் செலுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-24343106/24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
இவ்வாறு கல்லூரிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான மவுசு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. இன்னும் விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளதால் இதில் சேர விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications












