தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு! 100 சதவீதம் தேர்ச்சி!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறாத நிலையில் அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறாத நிலையில் அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு! 100 சதவீதம் தேர்ச்சி!

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் முடங்கிய தேர்வுகள்

கொரோனாவால் முடங்கிய தேர்வுகள்

கொரோனா தொற்றின் காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்த நிலையில் அத்தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இருப்பினும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவதில் குழப்பம் நீடித்து வந்தது.

10, 11ம் வகுப்பு மதிப்பெண் வெளியீடு

10, 11ம் வகுப்பு மதிப்பெண் வெளியீடு

இதனிடையே, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நிலையில், 12-ம் வகுப்பிற்கான முழு மதிப்பெண்களை கீழ்க்கண்ட வகையில் தமிழக அரசிற்கு வல்லுநர் குழு பரிந்துரை செய்திருந்தது.

பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண்

பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண்

அதன்படி, மாணவர், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவிகிதமாக கணக்கிடப்படும் என்றும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 20 சதவிகிதமாக கணக்கிடப்படும் என்றும், 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 30 சதவிகிதமாக கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

செய்முறைத் தேர்வு மதிப்பெண்

செய்முறைத் தேர்வு மதிப்பெண்

மேலும், 12-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதில், செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு

தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு

கொரோனா, ஊரடங்கு உள்ளிட்ட ஏதேனும் காரணங்களால் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு அவர்களின் 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

11, 12ம் செய்முறைத் தேர்வு

11, 12ம் செய்முறைத் தேர்வு

மேலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்கேற்காத மாணவர்களுக்கு அவர்களின் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.

தோல்வியடைந்த மாணவர்களும் 'பாஸ்'

தோல்வியடைந்த மாணவர்களும் 'பாஸ்'

அதோடு, கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு பங்கேற்காமல் இருந்திருந்தாலோ, அந்த மாணவர்கள் தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருதிக் கொண்டு அவர்களுக்கு 35 சதவிகித மதிப்பெண்கள் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மதிப்பெண் பட்டியல் வெளியீடு

மதிப்பெண் பட்டியல் வெளியீடு

இந்த நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பள்ளிக்கல்வித்தறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். மேலும், மாணவர்கள் அளித்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுச்செய்தியாக மதிப்பெண் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

தசம மதிப்பில் மதிப்பெண்கள்

தசம மதிப்பில் மதிப்பெண்கள்

உயர்கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க நடப்பு கல்வியாண்டு தசம மதிப்பில் 12ம் வகுப்பு மார்க் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
அறிந்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலை வரும் 22ம் தேதி முதல், www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN 12th Result 2021: TN Board +2 12th Result 2021 Live Updates: 100% pass percentage registered
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+