கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 336 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இத்தேர்வை தனித் தேர்வர்களாக 5 திருநங்கைகளோடு, 186 சிறை கைதிகளும் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 23-ஆம் தேதி இன்று காலை 9.30 மணிக்கு திட்டமிட்டபடி வெளியாகி உள்ளது.

இதில், சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம் 98.38 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 98.26 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
88.84 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 5,584. 5,456 அரசு பள்ளிகள் தேர்வு எழுதியதில் 1,687 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மொத்தமாக 401 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் 2 லட்சத்தி 6 ஆயிரத்து 796. இதில் மாணவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 950. மாணவியர்கள் 1 லட்சத்தி 27 ஆயிரத்து 846.
தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் மொத்தம் 4433. இதில் தேர்ச்சி பெற்றோர் 3944.
186 சிறை கைதிகள் தேர்வு எழுதியிருந்ததில் 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் தேர்வு முடிவுகள் குறித்த விரிவான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து பெறலாம்.


Click it and Unblock the Notifications












