டெல்லி: டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் (டிஐஎஸ்எஸ்) இன்ஸ்டிடியூட்டில் மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

புராக்கிராம் மேலாளர், மண்டல புராக்கிராம் மேலாளர், நிதி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் டாடா இன்ஸ்டிடியூட்டின் ஹைதராபாத் வளாகத்தில் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களில் சேர விருப்பமுள்ளவர்கள் குறைந்தது எம்.காம் படிப்பு படித்திருக்கவேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவமும் இருக்கவேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.30 ஆயிரம் முதல் இருக்கும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஹைதராபாத் வளாகத்தில் பணி நியமனம் செய்யப்படுவர்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://www.tiss.edu/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைன் மூலம் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30 ஆகும்.


Click it and Unblock the Notifications












