நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர உதவும் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழக மாணவர் முகுந்த் பிரதீஷ் உட்பட 23 பேர் முழு மதிப்பெண் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளனர்.
நாட்டில் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இள நிலை பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப் பட்டு வருகிறது.

தன்படி 2024- 25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 544 மையங்களில் 11.70 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் இன்று (பிப்ரவரி 13) வெளியானது. மாணவர்கள் https://jeemain.nta. ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறிந்து
கொள்ள முடியும்.
இத்தேர்வில் தமிழக மாணவர் முகுந்த் பிரதீஷ் உட்பட 23 பேர் முழு மதிப்பெண் பெற்று
புதிய சாதனை படைத்துள்ளனர். அதே போல், எஸ்சி பிரிவு வாரியான தர வரிசையிலும் தமிழகத்தை சேர்ந்த
மாணவி ஆராதனா 99.99 சதவீதம் பெற்று முதலிடம் பெற்று அகில இந்திய அளவில் சாதித்துள்ளார்.
கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைதேர்வு ஏப்ரல் 4 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
.ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐஐடி கல்லூரிகளில் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்மைத் தேர்வில் இம்முறை மொத்தம் 23 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுளனர்.
முகுந்த் பிரதீஷ், நெல்லை பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் படித்தவர்.
முகுந்த் பிரதீஷ் அகில இந்திய தரவரிசை பட்டியலில் (300/300) மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். முதலிடத்தில் உள்ள 23 மாணவர்களில் இவர் ஒருவரே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஸ்ரீகாந்த் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் பொறியாளராகவும், அம்மா தபால் துறையில் உதவியாளராக இருந்து விருப்ப பணி ஓய்வு பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications












