அன்பு மாணவர்களே.. அருமை மாணவியரே.. திருக்குறள் படிக்க ரெடியாய்யா?

Posted By:

சென்னை ; 2017-2018 கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு பள்ளியில் நீதிபோதனை வகுப்பில் திருக்குறள் கற்றுத்தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் கூறியுள்ளார்.

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு உள்ள மாணவ மாணவியர்களுக்கு நீதிபோதனை வகுப்பில் (நன்னெறி) வருகின்ற 2017-2018 கல்வியாண்டில் இருந்து திருக்குறள் கற்றுக் கொடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் அரசு ஆணை ஒன்றினைப் பிறப்பித்துள்ளார்.

6 வது முதல் 12 வது வகுப்பு வரை பாடத்திட்டத்தில் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் இரண்டையும் சேர்த்திட வேண்டும்.

கோர்ட் உத்தரவு

இதுதொடர்பான அதற்குரிய நடவடிக்கைகள் வருகின்ற கல்வியாண்டில் எடுப்பட வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தற்போது அரசு அதை அமல்படுத்தவுள்ளது.

 

வல்லுனர் குழு

வல்லுனர் குழுவின் ஆய்வின் அடிப்படையில் பள்ளியில் நடத்தப்படும் நீதிபோதனை வகுப்பு பாடத்திட்டத்தில் திருக்குறள் கற்பிக்கப்பட வேண்டும் என கோர்ட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வருகின்ற கல்வியாண்டில் .,

திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களைப் பிரித்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வருகின்ற கல்வியாண்டில் கற்பிக்கப்படும் என அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

குறள் வகுப்பு

இதையடுத்து வருகிற கல்வியாண்டு முதல் நீதிபோதனை வகுப்புகளில் மாணவ, மாணவியர் திருக்குறளையும் கட்டாயம் படிக்கவுள்ளனர். இதன் மூலம் மாணவர்களிடையே குறள் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

English summary
School education secretary T. Udhayachandran said Tirukkural will be taught to students in the coming academic year 2017-2018.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia