திருச்செந்தூரில் ஆங்கில திறன் வளர்க்கும் முகாம்... மே 8, 9 தேதிகளில்!

Posted By:

திருச்செந்தூர் : திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில திறன் வளர்க்கும் முகாம் இந்த மாதம் நடக்கிறது.

ஆங்கில திறன் வளர்க்கும் முகாம் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில திறன் வளர்க்கும் முகாம் இந்த மாதம் மே 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி மதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில் 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். கிராமப்புற மாணவர்கள், நகர்புற மாணவர்களுடன் போட்டி போட்டு வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டுமானால் அவர்களது ஆங்கில அறிவு நன்றாக இருக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் வேலை வாய்ப்பை வழங்க ஆங்கில மொழிப்புலமையை ஒரு முக்கிய காரணியாக கருதுகின்றன. மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதையும், ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருச்செந்தூரில் ஆங்கில திறன் வளர்க்கும் முகாம்... மே 8, 9 தேதிகளில்!

முகாமில் ஆங்கிலத்தில் பேச்சாற்றலை வளர்க்கும் விதங்களை செயல்முறை விளக்கங்களுடன் எளிய பயிற்சிகள் மூலமாகவும், நவீன மொழி ஆய்வகத்தை பயன்படுத்தி கம்ப்யூட்டர் மூலமாகவும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் கற்று தரப்படும். மேலும் ஆங்கில சொற்களை எளிதில் கற்று நினைவில் வைத்துக்கொள்ளும் முறைகளும் ஆங்கிலத்தின் 4 முக்கிய அம்சங்களான பேசுதல், எழுதுதல், கேட்டல் படித்தல் போன்ற அடிப்படை வழிமுறைகளை வளர்க்கவும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நிறைவு நாளில் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் பியிற்சி கட்டணமாக ரூ. 200/-க்கான டிமான்ட் டிராப்ட் முதல்வர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து, ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, திருச்செந்தூர் - 628215 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 6ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

நேரடி சேர்க்கையின் வாயிலாகவும் பதிவு செய்யலாம். இந்த முகாம் தொடர்பாக மேலும் தகவல் பெற விரும்பினால் 04639-242482 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை கல்லூரி முதல்வர் ஒய்ஸ்லின் ஜிஜி, செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

English summary
English Skills Camp in Tiruchendur Dr. Sivanthi Adithanar Engineering College is held on May 8 and 9, From 9.30 am to 4.30 pm.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia