”நேர மேலாண்மையை கற்றுக் கொள்ளுங்கள்”- சொல்கிறார் மென் திறன் பயிற்சியாளர் கிருஷ்ணா சுரேஷ்

Posted By:

-கிருஷ்ணா சுரேஷ்

சென்னை: கல்வி கற்கும் மாணவர்களுக்கு நேர மேலாண்மை அவசியம் என்றும், அதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார் மாணவர்களுக்கான மென்திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் கிருஷ்ணா சுரேஷ் என்.எல்.பி.

இதுகுறித்து அவர், "ஒரு மாணவனாக நீங்கள் உருவாக்கும் நேர மேலாண்மை உத்திகள் மற்றும் வழிமுறைகள் உங்களுடைய பிற்கால வாழ்விற்கு பெரிதும் உதவும்.

ஒரு மாணவனாக படிப்பில் நீங்கள் செலுத்தும் கவனம்,படிப்தற்கு ஒதுக்கப்படும் நேரம்,படிக்க வேண்டிய பாடங்களை சிறிது சிறிதாக உரிய காலகட்டத்தில் முடித்தல் ,திறம் பட திட்டமிடப்பட்ட நேர மேலாண்மை ஆகியவை உங்கள் இலக்கினை நோக்கி பயணப்பட உங்களுக்கு உதவும்.

படிக்கும் பழக்கம்:

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பாடங்களை படித்தல், பிரதி வாரத்திற்குரிய பாடங்களை திட்டமிட்டபடி படிக்க முடிந்ததா என்று ஆய்வு செய்தல், படிப்பதற்கு அரை மணியும்,படித்ததை நினைவு கொள்வதற்கு சில மணி துளிகளும் செலவிடலாம்.

தியானம், உடற்பயிற்சி அவசியம்:

படிக்கும் இடத்தை படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தி இடையுறு இல்லாமல் பார்த்துகொள்ள்ளலாம். வகுப்பு முடிந்தபின் பாடம் தொடர்பான பணிகளை பற்றி குறிப்பு எழதி வைத்து கொண்டு முடிந்த பின் சரி பார்க்கலாம். ஓய்வு நேரத்தில் உடற் பயிற்சி, தியானம்,மூச்சு பயிற்சி,பாடல்கள் கேட்டல்,போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

நேரம் தவறாமை:

தேவையான ஓய்வினை எடுத்துகொண்டு நேரம் தவறாமல் பணிகளை செய்ய வேண்டும். கடிகாரத்தை சில மணித்துளிகள் முன்பாக வைக்கலாம்.

படிக்கும் சூழல்:

காணொலி,மின் புத்தக உபயோகம், நடந்து கொண்டே படிப்பது,படிக்கும் இடத்தில் ஊதுபத்திகளை நறுமணத்திற்காக பயன் படுத்துதல் ஆகியவற்றால் மன அழுத்தம் குறைந்து மூளை சுறு சுறுப்பாகும்.

நம்பிக்கை:

எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

கனவு காணுங்கள்:

உங்கள் இலக்கினை அடைந்து விட்டதாக அடிக்கடி கனவு காணுங்கள்.நிஜத்தில் அதற்கு தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

தள்ளிப் போடாதீர்கள்:

கடைசி நேரத்திற்கு வேலைகளை தள்ளி போடாதீர்கள்.கவலை படுவதை நிறுத்துங்கள்.கடினமான வேலைகளை செய்யாமல் ஒதுக்காதீர்கள்.வேலையை செய்ய நேரம் ஒதுக்குங்கள்.உரிய காலத்தில் பணிகளை துவங்குங்கள்.

இறுதி தேர்வுக்கு தயார் ஆகுதல்:

திட்டமிடாமல் எதனையும் சாதிக்க இயலாது. வகுப்புகள்,கூட்டங்கள்,தேர்வு,படிக்கும் நேரம்,பாட திட்டங்கள், ஓய்வு,வகுப்பறை தொடர்பான பணிகள் போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்குதல், மாதிரி தேர்வுகளில் பங்கு பெறுதல், தினசரி செய்யவேண்டிய வேலைகளை பட்டியல் இடுதல் ஆகியவை அவசியம்.

முன்னுரிமை முக்கியம்:

திட்டமிட்ட பணிகளை பட்டியலில் உள்ளபடி முன்னுரிமை கொடுத்து செயல் படுத்தி வெற்றி பெற வேண்டும். ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின் என்ற திருக்குறளுக்கு ஏற்ப காலத்தையும், இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால் பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நேர மேலாண்மை அவசியம்:

எனவே, மாணவர்கள் கனவு கண்டு அதற்கான தகுதிகளை வளர்த்துகொண்டு திட்டமிட்ட பணிகளை முன்னுரிமை கொடுத்து நேர மேலாண்மையை பயன்படுத்தி செயல் படுத்தி வெற்றி பெறுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Soft skill trainer NLP krishna suresh state about Time management to the studnets.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia