டிஎச்எஸ்டிஐ இன்ஸ்டிடியூட்டில் மருத்துவ அதிகாரி வேலை!!

Posted By:

சென்னை: டிராஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்(டிஎச்எஸ்டிஐ) இன்ஸ்டிடியூட்டில் மருத்துவ அதிகாரி, ஜூனியர் ரெசிடெண்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 27-ம் தேதி நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் நேரடியாகப் பங்கேற்கலாம்.

டிஎச்எஸ்டிஐ இன்ஸ்டிடியூட்டில் மருத்துவ அதிகாரி வேலை!!

ஜூனியர் ரெசிடண்ட், மெடிக்கல் ஆபீஸர், ரிசர்ச் ஆபீஸர், டெக்னிக்கல் அசிஸ்டண்ட், ஸ்டடி நர்ஸ், கன்சல்டன்ட்(ரேடியாலஜிஸ்ட்) உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்த பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தகுந்த ஆவணங்கள், பிரதிகளுடன் இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்கவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு www.thsti.res.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

டிஎச்எஸ்டிஐ இன்ஸ்டிடியூட், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. குர்காவ்னில் இதன் தலைமையிடம் அமைந்துள்ளது. 2009-ல் அமைக்கப்பட்ட இந்த இன்ஸ்டிடியூட்டின் செயல் இயக்குநராக பேராசிரியர் ஜி. பாலகிருஷ் நாயர் உள்ளார்.

English summary
Translational Health Science and Technology Institute (THSTI) invited applications for recruitment to the post of Junior Resident, Medical Officer, Research Officer, Technical Assistant, Study Nurse & Consultant (Radiologist). Eligible candidates may attend walk in interview on 20 & 27 January 2016 at 10:00 a.m.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia