சென்னை: இன்டர்நெட்டில் தன்னைத்தானே விற்பனை செய்வதை அறிவித்து, பிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலை பெற முயற்சித்துள்ளார் காரக்பூர் ஐஐடி பட்டதாரி.
ஐஐடி காரக்பூரில் படித்தவர் ஆகாஷ் நீரஜ் மிட்டல். இவர் சமீபத்தில் புத்தகம் ஒன்றையும் எழுதினார்.
ஆனால் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இணையதளத்தில் தனது பயோ-டேட்டாவை அவர் அப்-லோட் செய்தார். அப்போதும் வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் இணையதளத்தில் தன்னைத்தானே விற்பதாக அவர் அறிவிப்பு செய்தார்.

தன்னுடைய விலையை ரூ.27,60,200 என்றும் அவர் அறிவித்தார். இவரது வித்தியாசமான விளம்பரத்தைப் பார்த்சு பிளிப்கார்ட் நிறுவனம் தன்னை அழைக்கும் என்று நம்பியிருக்கிறார் ஆகாஷ். பிளிப்கார்ட் நிறுவன இணையதளத்திலும் இந்த விளம்பரத்தை அவர் போஸ்ட் செய்துள்ளார்.
பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அந்த விளம்பரத்தை டெலிட் செய்துவிட்டார் ஆகாஷ்.


Click it and Unblock the Notifications












