தமிழகப் பரபரப்புக்கு மத்தியில்.. நாடு முழுவதும் நாளை மறுநாள் "நீட்" தேர்வு!

Posted By:

சென்னை : நாளை மறு நாள் மே 7ந் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வில் தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். உச்ச நீதி மன்றம் நீட் தேர்ச்சி கட்டாயம் என தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பில் சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீட் தேர்வு, இந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நீட் கட்டாயம் எனக் கூறியுள்ளது. இதில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய சுகாதராத் துறை இன்னும் ஒப்புதல் தரவில்லை.

நீட் தேர்வு நாளை மறு நாள்

அறிவித்தபடி நீட் நுழைவு தேர்வு, நாளை மறுநாள், நாடு முழுவதும் நடக்கவிருக்கிறது. 103 நகரங்களில், இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், வேலுார் ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 10 மொழிகளில் நீட் தேர்வு நடக்கவிருக்கிறது.

சமச்சீர் கல்வி பாடத்திட்ட மாணவர்கள்

நாடு முழுவதும் மொத்தம், 11 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்; அவர்களில், 80 ஆயிரம் பேர், தமிழக மாணவர்கள். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழக அரசு

நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு சவாலான ஒன்றாகவே உள்ளது. பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டியது பள்ளிக்கல்வித்துறையின் பொறுப்பு. பாடத்திட்டத்தில் மாற்றம், மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்களை சமாளிக்கு,ம வகையில் ஆசிரியர்களுக்கு தரமான பயிற்சி ஆகியவைகளை செய்துதர வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.

பாடத்திட்டத்தில் மாற்றம்

பாடத்திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து அதற்கு தகுந்தாற் போல ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்குச் சொல்லி கொடுக்கும் போது கட்டாயம் தமிழக மாணவர்களாலும் நுழைவுத் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும். தமிழக மாணவர்களும் கிராமப்புறத்தில் உள்ள மற்ற மாணவர்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. சிபிஎஸ்இ போன்ற பாடத்திட்டங்களையும் தமிழக மாணவர்களாலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களாலும் கட்டாயம் படிக்க முடியும். முதலில் பாடத்திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.

English summary
About 80thousand people in TamilNadu will be participating in the exam next day on May7th tomorrow. The SupremeCourt has said that it iscompulsory to pass

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia