தமிழக அரசுப் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தோ்வுக் கட்டணம் கிடையாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை விழாவில் பங்கேற்ற அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் ரோட்டரி சங்கம் சாா்பில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் போட்டியைத் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:-
5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பங்கேற்கும் சிறப்புக் குழந்தைகளுக்குத் தேர்வில் சலுகை அளிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். 10, 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள அரசு மற்றும் தனியார்ப் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவு 75 சதவிகிதம் இருக்க வேண்டும். 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.